ஆனந்த விகடனில் இருந்து...
அர்ஜென்டினாவின் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந் தவர் சே குவேரா. மருத்துவம் படித்த இவர், டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார்.
ஆனால், காலம் அப்போது அவருக்கு வேறு ஒரு பாடத்தைக் கற்றுத் தந்தது. கௌதமாலா நாட் டில் நடந்து வந்த ஓர் ஆட்சியை அமெரிக்க அரசாங்கம் தனது சுய நலத்துக்காகத் தூக்கியெறிந்தது. இதைப் பார்த்து சே குவேரா துடித் தார். தங்களின் அரசாங்கத்தை அமெரிக்கா தூக்கியெறிந்ததைப் பார்த்து துணுக்குறாத அந்த நாட்டு மக்களின் மௌனம் சே குவேராவை மேலும் துடிக்கச் செய்தது. அமெ ரிக்காவின் இந்த அட்டூழியத்தை விவரித்து சே குவேரா புரட்சி வெடிக்கப் பேச... அவருக்கு ஆபத்து வந்தது. மெக்ஸிகோவுக்குத் தப்பி ஓடினார். அந்தச் சமயம் கியூபா நாட்டில் ஆட்சி செய்து வந்த சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராக கெரில்லா படை திரட்டிப் போராடி வந்த ஃபிடல் காஸ்ட்ரோ வின் அறிமுகம் கிடைத்தது. முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் பலமான நட்பு மலர்ந்தது.
காஸ்ட்ரோவின் தலைமைத் தளபதி ஆனார் சே குவேரா. இவரின் வீரமும் கெரில்லா படை சாகசங்களும் கியூபாவை ஆண்ட சர்வாதிகாரியை வீழ்த்தி, காஸ்ட்ரோவின் கைகளில் கியூபாவின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தன.
இதன்பின் சே குவேரா, கியூபா வின் பொருளாதார அமைச்சரா னார். கியூபாவைப் பன்னெடுங்கால மாகச் சுரண்டி வந்த அமெரிக்க நிறுவனங்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்தார். கியூபாவின் சுதந்திரத்துக்குத் தன்னோடு போராடிய ஒரு கெரில்லா பெண் போராளியை மணந்து, இரண்டு குழந்தைகளையும் பெற்றார். இருந் தாலும், சே குவேராவால் அந்த வாழ்க்கையில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. காரணம், அப்போது காங்கோ நாட்டில் புரட்சியில் ஈடு பட்டிருந்த கெரில்லாக்களுக்கு சே குவேராவின் வழிகாட்டுதல் தேவைப் பட்டது.
கண்ணீர் மல்க தனது நண்பர் காஸ்ட்ரோவுக்குக் கடிதம் எழுதி விட்டு திடீரென தலைமறைவானார். தனது உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ-வை விட்டு சே குவேராவை உலகம் முழுக்க சல்லடை போட்டுத் தேடியது அமெரிக்கா. ஆனால், காங்கோ நாட்டின் அடர்ந்த காடு களில் கம்யூனிஸ்ட் கெரில்லா வீரர் களுக்குப் போர்ப் பயிற்சி கொடுத் துக் கொண்டிருந்தார் சே குவேரா.
சுமார் இரண்டு வருடகாலத்தை காங்கோ நாட்டு காடுகளில் கழித்த சே குவேரா, பொலிவியா சென்று, அங்கே ஆட்சி செய்து வந்த அமெ ரிக்காவின் கைக்கூலி அரசுக்கு எதி ராகக் கெரில்லா யுத்தம் நடத்தினார். அமைச்சராக இருந்த ஒருவர் மீண் டும் போராளியாக மாறி யுத்தம் செய்தார் என்றால், அது வரலாற் றில் சே குவேரா மட்டும்தான்.
எதிரிகளுக்குத் தெரியாமல் காடு களில் அவர் ஒளிந்திருந்த சமயம், சே குவேராவால் பயிற்சி அளிக்கப் பட்ட கெரில்லா வீரன் ஒருவன் துரோகியாக மாறி, சி.ஐ.ஏ-வுக்குத் துப்பு கொடுக்க... பொலிவியாவின் ராணுவம் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி சே குவேராவின் மார்பை தோட்டாக்களால் துளைத்தது. ஆனால், அந்த வீரனின் கண் இமைகள் அந்தச் சமயம் கூட மூடிக் கொள்ளவில்லை. கண்கள் திறந்தபடியேதான் அவர் உயிர் அவரை விட்டுப் பிரிந்தது!